ஆளுநர் ஆர்என் ரவியின் நாக்கை அறுத்து விடுவோம்… சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் பேச்சால் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 7:39 pm

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தொழிற்சங்கத்தின் தியாகத்தை கொச்சைப்படுத் நினைத்த ஆர்.என்.ரவியின் நாக்கை அறுக்க கூடிய போராட்டத்தை நடத்துவோம் என்று சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் எச்சரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெண்மணி தியாகிகள் நினைவகத்தை கொச்சைப்படுத்தியதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து தஞ்சாவூரில் சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு விழாவிற்கு சென்றால் மரியாதையாக அரசு விழாவுக்கு சென்று விட்டு வர வேண்டும் என்று கூறினார்.

சம்பந்தம் இல்லாமல் வெண்மணிக்கு சென்று வெண்மணி தியாகிகளின் நினைவிடத்தை கொச்சைப்படுத்தி பேசி விட்டு வருகிறார் என்று சொன்னால், ஆர்.என்.ரவியின் நாக்கை அறுக்கும் நிலைமை வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், உன் நாக்கை அறுத்து விடுவோம் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தொழிற்சங்கத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்த நினைத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் எங்கேயாவது போனால் நாக்கை அறுக்கக் கூடிய போராட்டத்தை நடத்துவோம் என்று பரபரப்பாக பேசினார்.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?