கரூர்: கரூரில் அதிகரிக்கும் குட்கா, கஞ்சா ஆகியவைகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதையும், அதை தடுக்காத காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தினையும் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் சர்ச் கார்னர் அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுவற்றில் சுவர் விளம்பரம் எழுதுவது சம்பந்தமாக பாஜக, திமுக வினரிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், திமுக வினர் எப்போதும் போல, தாக்குதலில் ஈடுபட்டதால் பாஜக நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், திமுக வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் செல்வன் தலைமையில், அதே பகுதியில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட சாலைமறியல் நடைபெற்றது.
இந்நிலையில் கலவரபூமியாக காணப்பட்ட இடத்திற்கு நேரில் வந்த பாஜக கரூர் மாவட்ட தலைவர் அண்ணாமலை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கரூர் மாவட்டத்தில், 1 நெம்பர் லாட்டரி விற்பனை, கஞ்சா, குட்கா ஆகியவை விற்பனை தலை விரித்தாடுவதோடு, 24 மணி நேரமும் மதுக்கள் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றது என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், திமுகவினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டதோடு எங்கள் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க செல்வதாக கூறி ஆர்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை கரூர் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றார்.
இந்நிலையில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் நாதன், திமுக நகர செயலாளர் கனகராஜ் மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எங்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகளை தாக்கியுள்ளனர் என்றும், ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கண்முன்னரே ரெளடியிசம் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், எங்கள் சாலைமறியல் மற்றும் ஆர்பாட்டத்தினை கட்டுப்படுத்தி அனுப்பும் வேலையை மட்டுமே காவல்துறையினர் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலேயோ அல்லது அவரின் உத்தரவு பெற்றோ கரூரில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.