கரூர் : சுவர் விளம்பரத்தில் பாஜக திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டநிலையில காவல்துறை முன்னிலையில் திமுகவினர் பாஜகவினரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த தினம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கரூர் மாவட்ட பாஜக சார்பில், ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றனர்.
கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சுவற்றில், பாஜகவினர் விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பாதி மட்டும் எழுதியிருந்த நிலையில், கரூர் நகர திமுகவினர், அதை அழித்து விட்டு தமிழக அரசின் சாதனைகளை விளம்பரம் எழுதியுள்ளனர்.
ஏற்கனவே எழுதப்பட்டிருந்த பாஜக விளம்பரத்தினை ஏன் அழித்தீர்கள் என்று கேள்வி கேட்ட பாஜக கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம் மற்றும் ஐடி விங் மாவட்ட தலைவர் அருண் என்பவர்கள் அடங்கிய பாஜகவினரை சட்டையை பிடித்து திமுக வினர் தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், கரூர் மத்திய நகர திமுக நிர்வாகியும், கரூர் மாநகராட்சி திமுக உறுப்பினருமான எஸ்பி கனகராஜ் தலைமையில் அரங்கேறிய இந்த சம்பவத்தினையடுத்து கரூர் நகர காவல்துறை டி.எஸ்.பி தேவராஜ் முன்னிலையிலேயே திமுகவினர் தாக்குதல் நடத்தியது அரசின் கவனத்திற்கு செல்லுமா ? என்பது நடுநிலையாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கை ஆகும்.
கரூர் நகர காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்ட நிலையில், கரூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ் கண் முன்னரே, பாஜக நிர்வாகிகளை திமுக நிர்வாகிகள் தாக்கிய சம்பவமும், மேலும், பாஜக பாஜக நிர்வாகிகளை வேஷ்டியை அவிழ்த்து விடுங்கள் என்று திமுக நிர்வாகிகள் கூச்சலிட்ட சம்பவமும், பாஜக நிர்வாகிகளை, மிகவும் தரம் தாழ்ந்து, மிகவும் கேவலமாக திட்டியுள்ளனர்.
மேலும் திமுக நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகளை தாக்கிவிட்டு மேலும் தாக்க முயற்சித்த வீடியோ மட்டுமில்லாமல் அவர்கள், பாஜக நிர்வாகிகளை கொச்சையாக திட்டிய காட்சிகள், மீண்டும் திமுக ஆட்சியில் ரெளடியிசம் தொடங்கியுள்ளதா ? என்ற கேள்விக்கனைகளும் எழுந்துள்ளதோடு, திமுகவினரின் இந்த செயல் மிகவும் அநாகரீகமாக இருப்பதோடு, ஆளுகின்ற திமுக ஆட்சியில் திமுக வினரே இது போல நடந்து கொள்வது மிகவும் கண்டனத்திற்குரியது என்று கூறி, பாதிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் செல்வன் தலைமையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதோடு, அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர்.
அரசு சுவற்றில் விளம்பரம் எழுதுவது தவறு என்ற போதிலும், கடந்த 10 மாதங்களாக, எதிரே தான் பயணியர் மாளிகை உள்ளது என்றும், அமைச்சர் செந்தில்பாலாஜி வந்து செல்லும் இடம் என்பதால், திமுகவினர் ஒரு இடம் விடாமல் ஆங்காங்கே விளம்பரப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பாஜகவினர் சிறிய இடத்தில் பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, எழுதப்பட்ட சிறு விளம்பரத்தையும் திமுகவினர் ஆக்கிரமித்து, ஏற்கனவே எழுதப்பட்ட பாஜக விளம்பரத்தையும் அழித்துவிட்டு திமுகவினர் விளம்பரம் எழுதிய சம்பவமும், இன்று காலை சென்னையில் பாஜக நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, கரூரில் பாஜகவினரை திமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், திமுக வினரின் இந்த செயலால் பாஜக நிர்வாகிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக நிர்வாகி ஒருவரது செல்போனையும் எடுத்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
This website uses cookies.