திமுக அமைச்சர் – திமுக எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் : வெடித்தது உட்கட்சி பூசல்.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2023, 8:16 pm

திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தினகரன் தலைமையில் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனாங்கூர் மற்றும் பில்லூர் கிராமங்களில் இந்த பிரச்சாரக் கூட்டமானது நேற்று மாலை 6 மணிக்கு ஆனாங்கூர் மந்தகரை திடல் பகுதியிலும் மற்றும் 7 மணிக்கு பில்லூர் மார்க்கெட் வீதியிலும் நடைபெற திட்டமிடபட்டது.

பில்லூரில் நடைபெற இருந்த சாதனை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரை ஆற்ற வருகை புரிந்த நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆதரவாளர்கள் கூட்டத்தின் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்களில் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெறாததால் நிகழ்ச்சி அமைப்பாளரான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தினால் கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் அரை மணி நேரம் நடைபெற இருந்த நிலையில் 5 நிமிடத்தில் முடிவு பெற்றது. ஏற்கனவே விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்