ரூட்டு தல பிரச்சனை? அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் : மாறி மாறி சண்டையிட்ட காட்சிகள் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 10:01 pm

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர்களிடையே சண்டையிடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கோவிந்தசாமி கலைக்கல்லூரி மேல்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இரு தரப்பு மாணவர்களிடையே பஸ்ஸில் பயணம் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பு மாணவர்களுக்கும் கல்லூரி வெளியே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களுடன் வெளி ஆட்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சண்டையிடுவது தொடர்கதையாக உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!