நடுரோட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்குள் மோதல் : கட்டையை எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கியதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 11:59 am

புதுச்சேரி அடுத்த அரியூரில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கடுமையாக ஒருவருக்கொருவர் பேசியும் கைகளால் தாக்கிக் கொண்டனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சரிப்பட்டு வராது.. திமுகவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சால் பரபர!

இதில் ஒரு கட்டத்தில் மாணவர்கள் அருகில் கிடந்த விறகு கட்டை எடுத்து சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த வீடியோ இணையத்திலும் வைரலாக வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில் தற்போது அரசு பள்ளி மாணவர்கள் நடுரோட்டில் விறகு கட்டையால் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!