அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் : தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2024, 8:39 pm
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது. இந்த மோதலால் இன்று பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு மாணவனின் கைவிரல் துண்டானது.
இதைப்பார்த்த வரலாற்று ஆசிரியர் சிவக்குமார் வந்து மோதலை விலக்கி விட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரை ஆய்வாளால் வெட்டியுள்ளனர்.
இதில் ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆசிரியரையும், மாணவனையும் அரசு மருத்துவமனையில் திருவிடை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.