மது அருந்துவதில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்… இளைஞர்களை கட்டி வைத்து அடித்த கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2023, 8:38 am

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே மது அருந்துவதில் இரு வேறு சமூகத்தினருடைய ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்களை கட்டி வைத்து தாக்குதலில் ஈடுபட்ட நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் மகன் வேலன் (வயது18) அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீகாந்த் (வயது 25) ஆகிய இருவரும் போதக்காடு சாலையில் அமர்ந்து மது அருந்தியதாகவும் அவ்வழியாகச் சென்ற இளைஞரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் வேலன் என்பவர் அந்த இளைஞரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்தவர் அருகே உள்ள போதகாட்டிற்கு சென்று தன்னை அப்பகுதிச் சார்ந்த இளைஞர்கள் அடித்து விட்டார்கள் என்று கூறி மினி டெம்போ மூலம் 30 மேற்பட்ட கும்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் கயிற்றால் கட்டி சரமாரியாக தாக்கி அவ்வாகனத்தில் தூக்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த வேலன் மற்றும் ஸ்ரீகாந்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவத்தால் பயர்நத்தம் கிராமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இது குறித்து பொம்மிடி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் விசாரணை செய்து போதகாடு பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் ரவிச்சந்திரன் வயது 34 கோவிந்தன் மகன் மாதையன் வயது 28 அன்பு மகன் அரவிந்த் வயது 25 ஆகியோர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் பொம்மிடி காவல் நிலைய வளாகத்தில் இரு வேறு சமூகத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…