இரு சமூகத்தினரிடையே மோதல்… கரூர் பொய்யாமணி கிராமத்தில் பதற்றமான சூழல் : போலீசார் குவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2024, 3:43 pm
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அதற்காக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
அந்த பேனரை நேற்று மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பேனரை கிழித்ததால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட போது, அப்பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினர் .

அதனைத் தொடர்ந்து இன்று காலை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் அவ்வழியே சென்றபோது, மற்றொரு சமுதாயத்தினர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதனால் இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்களை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு சமுதாயத்தினர் சாலை மறியல் செய்தனர்.
அதனை எடுத்து குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் சாலை மறியல் செய்தவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது
15 க்கு மேற்பட்டோர் நபர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.