ஒரே CAMPUSல் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்… கல் வீசி தாக்குதல் : போலீஸ் குவிப்பு.. பழனியில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 3:56 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோவிலுக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லுரி செயல்பட்டு வருகிறது.

இதனை ஒட்டியே அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் இன்று 57ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் சிலர் இன்று கல்லூரி அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தேநீர் அருந்திக்கெண்டிருந்த பழனியாண்டவர் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருதரப்பு மாணவர்களும் கல்வீச்சு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டு கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மோகன் மற்றும் கவின் ஆகிய இரு மாணவர்களுக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் மாணவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் இரு கல்லூரிகளிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 490

    0

    0