ட்ராக்டர் ஓட்டுநராக மாறிய 6ஆம் வகுப்பு மாணவன்.. விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 10:40 am

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கே.ஜி. கண்டிகை ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கையில் லாவகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர்.

மாநில நெடுஞ்சாலையில் இந்த பள்ளி மாணவர்கள் டிராக்டர் ஓட்டும் செயல் அந்த பகுதி வழியாக செல்லும் கனராக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்கள் டிராக்டர் ஓட்டும் இந்த செயலை பாராட்ட நினைத்தாலும் விபரீதம் ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் டிராக்டர் ஓட்டும் இந்த செயல் பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை ஏன் இந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை

அல்லது மாணவர்களை இது போல் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று ஏன் கண்டிக்கவில்லை என்று அதிகாரிகளை பார்த்தும் பொதுமக்கள் வினா? எழுப்பி உள்ளனர்.

மொத்தத்தில் ஆபத்தை உணராமல் டிராக்டர் ஓட்டி பழகும் இந்த பள்ளி மாணவர்களின் செயல் விபரீதம் ஏற்படும் என்பது மட்டும் இந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

https://vimeo.com/816119551

இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்….

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 474

    0

    0