8ஆம் வகுப்பு மாணவனும், மாணவியும்… போலீசாரின் சபல புத்தி : போக்சோவில் கைது.. கோவையில் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2024, 3:49 pm

எட்டாம் வகுப்பு மாணவனும், மாணவியும் தனியாக சந்தித்து பேசிய போது போலீசார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் தனியாக நின்று பேசியதை புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய ரவிக்குமார் என்ற காவலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டதால் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கோவை பீளமேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த ரவிக்குமார் மீது பல்வேறு முறைகேடு புகாரில், கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!