தற்கொலை செய்த 9ஆம் வகுப்பு மாணவன்… காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம் : விசாரணையில் பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 5:14 pm

தற்கொலை செய்த 9ஆம் வகுப்பு மாணவன்… காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம் : விசாரணையில் பரபரப்பு தகவல்!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காமாட்சிஅம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் – உஷா தம்பதியின் மகன் ஜீவரத்தினம். இவர் கே.வி.குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு ஜீவரத்தினம் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் காரணம் எனக்கூறி பள்ளி நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும் என கூறி உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் உறவுகளுடன் தெரிவித்தனர் இந்த சம்பவத்தால் கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 819

    0

    0