செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்… காதலுக்காக இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 10:20 am

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்… காதலுக்காக இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

திருச்சி அருகே காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க கோரி கைப்பேசி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று மிரட்டல் விட்ட வாலிபரால் பரபரப்பு.

திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம், நாராயணபுரத்தை சோந்த கட்டடத் தொழிலாளி தினேஷ் (வயது 22). இவா் அதே பகுதியை சோந்த 17வயது சிறுமியை காதல் திருமணம் செய்ய 2022, ஜூலை 17ஆம் தேதி அழைத்து சென்றாராம்.

புகாரின்பேரில், சிறுமியை மீட்ட மணிகண்டம் போலீஸாா், போக்ஸோ சட்டத்தில் தினேஷை கைது செய்து சிறையிலடைத்தனா்.

சிறையிலிருந்து வந்த அவா், காதலித்த பெண்ணுடன் தொடா்பை புதுப்பித்து கொண்டாா். இதையடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனா்.

இந்நிலையில், அந்த போக்ஸோ வழக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுதொடா்பாக தினேஷுக்கும் அப்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டு, பெண் கோபித்து கொண்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தினேஷ் நாகமங்கலம் பகுதியிலுள்ள கைப்பேசி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளாா்.

தகவலறிந்து வந்த மணிகண்டம் போலீஸாா், தினேஷுடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அந்தப் பெண்ணையே திருமணம் செய்துவைப்பதாக இருவீட்டாரும் உறுதி அளித்தனா்.

பின்னா் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் தினேஷ் கீழே இறங்கி வந்தாா். சுமாா் 5மணி நேரம் கைப்பேசி கோபுர உச்சியில் நின்றதால், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ