கோவை மண்டலத்தில் 78 டாஸ்மாக் கடைகள் மூடல் : பூட்டி சீலிடப்பட்டதாக நோட்டீஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 6:41 pm

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு 166 மதுபான கடைகளும், கோவை தெற்கு 139 கடைகளும் உள்ளன என்று தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 305 கடைகள் கோவை மாவட்டம் நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் இன்று முதல் 20 கடைகள் முழுவதுமாக அடைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்தில் மொத்தம் 933 மதுபான கடைகள் உள்ளன இவற்றில் கோவை வடக்கு கோவை தெற்கு திருப்பூர் ஈரோடு நீலகிரி கரூர் போன்ற இடங்களில் 78 கடைகள் மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 500 கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் 20 கடைகள் எவ்விதமான லாபமின்றியும், பள்ளி கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகே அமைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, அதேபோன்று தேர்வு செய்யப்பட்டுள்ள 20 கடைகளில் அவ்வப்போது ஏற்படுகின்ற அசம்பாவிதங்கள் அறிக்கை பெறப்பட்டு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!