கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடல்.. கோவை மாநகராட்சி மீது அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 7:09 pm

கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடல்.. கோவை மாநகராட்சி மீது அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்!!

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.

இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில் இங்குள்ள விலங்குகள் பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கோவையின் அடையளமாக விளங்கிய வ.உ.சி உயிரியல் பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும் என கோவை மாநகராட்சி மேயரை வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள், கோவை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க கடந்த 2 வருடத்திற்கு முன் திமுக அரசு அறிவித்திருந்தது.

சிறைச்சாலைககு சொந்தமான இடத்தில் இப்பூங்காவை அமைக்க அவசர கூட்டம் போட்டு அவசரத் தீர்மானம் இன்று நடைபெற்றது. கட்டிடமே கட்டக்கூடாது என கோர்ட் உத்தரவு உள்ள போதும், பூங்கா என சொல்லிவிட்டு தற்போது கூட்டரங்கு கட்டுவது எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வ.உ.சி பூங்கா, மாநகராட்சி கலையரங்கம் என ஏராளமான மாநரகாட்சிக்கு சொந்தமான இடம் இருக்கும் போது கூட்டரங்கு கட்டுவதற்காக 200 கோடி ரூபாய் போட்டு கட்ட வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர்.

1963ல் சென்னைக்கு பிறகு கோவையில்தான் வஉசி உயிரியல் பூங்கா இருந்தது. தற்போது அது மூடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை கோவை மாநகராட்சி எடுக்கவில்லை, மக்கள் மீது அக்கறையில்லாத ஒரு மேயர், கோவை வளர்ச்சி மீது அக்கறை இல்லை என மேயர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ