ஆசை ஆசையாய் வாங்கிய ஆடை.. பானி பூரி சாப்பிடுவதற்குள் அபேஸ்.. ஷாக் சிசிடிவி!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 8:50 am
cctv
Quick Share

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த நகர பகுதியான அண்ணாசாலையில் உள்ள ஜவுளி கடையில் ஒன்றில் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகாக ரூ. 7 ஆயிரத்திற்க்கு புதிய ஆடைகள் வாங்கியுள்ளனர்.

பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த அவர்கள் அந்த ஆடைகளை பையுடன் தங்களது இருசக்கர வாகனத்தில் மாட்டி விட்டு சாலை எதிரே உள்ள ஒரு பாணி பூரி கடையில் பாணி பூரி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது தங்களது வாகனத்தில் மாட்டி வைத்திருந்த புதிய ஆடைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்த கடையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்த போது 40 வயது மதிக்கதக்க டிப்-டாப் ஆசாமி ஒருவர் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் இரண்டு பைகளில் மாட்டி வைத்திருந்த புதிய ஆடைகளை லாவகமாக திருடி கொண்டு பக்கத்து தெருவில் தான் புதிய ஆடைகள் வாங்கியது போல் கூலாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து இது குறித்து தம்பதியினர் பெரியகடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 200

0

0