மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று முதல்வர் பைரேன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில் அவர் கூறியதாவது: “இந்த ஆண்டு மிகவும் துரதிருஷ்டவசமாக இருந்தது. கடந்த மே 3 முதல் இன்றுவரை நடந்ததை நான் வருந்துகிறேன். இது மாநில மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர், பலர் வீடுகளைக் கைவிட்டு வெளியேறினர். இதை உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். எனது பொறுப்பில், நான் இதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களில் அமைதியின் பாதையை நோக்கி நாம் முன்னேறி வந்ததை நான் கவனித்தேன். 2025 புத்தாண்டு நம் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என எனது நம்பிக்கை.
இதையும் படியுங்க: சென்னை மக்களுக்கு புத்தாண்டு பரிசாக 35% தொழில் வரி.. திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!!
கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து சமூகங்களுக்கும் எனது வேண்டுகோள், அமைதியான மற்றும் வளமான மணிப்பூர் காண நாம் அனைவரும் ஒன்றாக ஒத்துழைக்க வேண்டும்.”
மேலும், அவர் கடந்த 2023 மே முதல் அக்டோபர் வரை 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 345 சம்பவங்கள், இந்த ஆண்டு மே முதல் இன்றுவரை 112 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என தெரிவித்தார்.
இன்று 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 2,511 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 625 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12,047 எப்.ஐ.ஆர்.கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.