மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் ஸ்பெயின் பறந்துவிட்டார் CM.. திமுக நிலை சிரிப்பாய் சிரிக்கறிது : ஆர்பி உதயகுமார் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 1:13 pm

மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் ஸ்பெயின் பறந்துவிட்டார் CM.. திமுக நிலை சிரிப்பாய் சிரிக்கறிது : ஆர்பி உதயகுமார் விமர்சனம்!

மதுரை சோழவந்தானில் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார் அப்போது பட்டியலின பெண்ணுக்கு நடந்த அநீதியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகனை சாதாரண வழக்கில் கைது செய்ததை கண்டித்தும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதி திருமங்கலம் தொகுதி உசிலம்பட்டி தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் மாநில மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஒன்றிய செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து திமுக அரசில் நடைபெற்று வரும் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தரப்பினர் பேசினார்கள்.

பின்னர் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்: 2 லட்சம் கோடி வாங்கி கொண்டு மடிக்கணினி வழங்கவில்லை. தாலிக்கு தங்கம் வழங்கவில்லை. விலைவாசி பிழைப்பதற்கு நடவடிக்கை இல்லை இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதல்வர் ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்பிவிட்டார். பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றார். திமுக நிலை சிரிப்பாய் சிரிக்கிறது.

திமுக 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு காவிரி உரிமையை மீட்டெடுக்கவில்லை காவிரியில் உச்ச நீதிமன்றத்தில் படி தீர்ப்பின் படி தண்ணீர் வாங்கி தர முடியவில்லை.முல்லை பெரியாரின் புதிய அணை கட்டுவதை தடுக்கவில்லை இது குறித்து திமுக பேசவில்லை. கச்சத்தீவை மீட்டெடுக்க வரவில்லை. தமிழகத்தின் ஜீவாதார உரிமையை பறிகொடுத்த திமுகவிற்கு ஓட்டு போட்டு மக்கள் ஓட்டாண்டி ஆனது தான் மிச்சம்

இந்த நிலை மாற வேண்டுமென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் வாக்களிக்க வேண்டும்என்றார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 323

    0

    0