பத்மஸ்ரீ விருதாளர் சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000- ஆம் ஆண்டில் “ஸ்ரீசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது, ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியினை கேள்விப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட
ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
இதன்படி பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்
அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது, வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.