முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு : திருவாரூரில் இளைஞரை கைது செய்த போலீஸ்…!!

Author: Babu Lakshmanan
15 April 2022, 2:40 pm

கன்னியாகுமரி: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பிய திருவாரூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முகம்மது நபி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவில் கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் குறித்த அவதூறு கருத்துக்களை பதிவிட்டிருந்தது திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியைச் சேர்ந்த அருள்முருக கிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.

பின்னர், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருவாரூர் சென்று அருள்முருக கிருஷ்ணனை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அருள் முருக கிருஷ்ணனை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட அருள்முருக கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1403

    0

    0