ஆட்சியைக் கவிழ்க்க சதி நடைபெற்று வருவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், மற்ற கட்சிகளை பார்த்து பயம் கொள்ள தேவையில்லை, அவரின் குடும்பத்தை பார்த்தும் சொந்த கட்சியினரை பார்த்துத்தான் பயப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவை சித்தாப்புதூரலில் மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அவர்களை சந்தித்த அவர்,
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றங்களை பிரதமர் மோடி ஏற்படுத்தியதாக கூறிய வானதி சீனிவாசன், பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு மகளிர் தினத்தை ஒட்டி நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
வடமாநில தொழிலாளர்கள் புலம்பெயர்வால் தொழில் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவுமம், புலம்பெயர் வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் அரசு தோல்வியடைந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
பாஜக அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது என தெரிவித்த வானதி சீனிவாசன் பாஜக அதிமுக கூட்டணி என்பது தேசிய தலைமை எடுத்திருக்க கூடிய முடிவு என கூறினார்.
பாஜகவிலிருந்து சிலர் விலகுவதால் பாதிப்பு ஏற்படாது என கூறிய வானதி சீனிவாசன் இது கூட்டணியில் பலவீனமாக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுவதாக கூறி வரும் முதல்வர் ஸ்டாலின் திமுகவே ஆட்சியை தனது செயல்பாட்டின் மூலம் கவிழ்த்துக்கொள்ளும் என்பதை உணர வேண்டும் என கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படாமல் தனது குடும்பத்தையும் சொந்தக் கட்சியினரையும் பார்த்து தான் பயம் கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளார்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.