முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை கிண்டலாக சித்தரித்த விவகாரம் : பாஜக இளைஞரணி நிர்வாகி கைது

Author: Babu Lakshmanan
12 April 2022, 2:46 pm

கரூர் : தமிழக முதல்வர், நிதி அமைச்சர் உள்ளிட்ட சிலரின் புகைப்படத்தை கேவலமாக சித்தரித்து பதிவிட்ட கரூர் பாஜக இளைஞரணி நிர்வாகியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த முனியப்பனூரை சார்ந்தவர் விக்னேஷ்.பாஜக இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட சிலரின் படத்தை கேவலமாக சித்தரித்து புகைப்படம் தயார் செய்து நேற்று கூப்பான்கள் என்று தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த திமுக ஐ.டி விங்க் பொறுப்பாளர் தீபக் சூரியன் என்பவர் இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வாங்கல் காவல் நிலைய போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 1269

    0

    0