டார்கெட்டை முடித்து காட்டுவாரு… அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 4:15 pm

இந்திய அளவில் முதன்முதலில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தினை கடந்த 1989 ம் ஆண்டே தந்தவர் கலைஞர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் தடாகோவில் பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அதற்கான ஆணைகளை வழங்குகினார். முதல் கட்டமாக கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகம் செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

விழாவில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கிய பின்னர் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- தமிழக உழவர்களை மகிழ்விக்கும் வகையில் 1 இலட்சம் இணைப்பு சாத்தியமா என்று கேட்டார்கள். நடத்தி காட்டுவதுதான் திமுக ஆட்சியின் சாதனை. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதத்தில் வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 50 ஆயிரம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் முதன்முதலில் கடந்த 1989 ம் ஆண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தினை வழங்கியவர். கலைஞர் என்றும், அவரது வழி வரும் நமது ஆட்சியில் நல்ல மழை பெய்து வருகிறது.பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து துறையும் போட்டி போட்டுக்கொண்டு பணி நடைபெறுகிறது. மின்னகம் மூலம் 99% புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் 4ம் இடத்தில் உள்ளது. சூரிய மின்சக்தி மாவட்டங்களாக அனைத்து மாவட்டங்களையும் மாற்ற பணி நடைபெற்று வருகிறது. சூரிய மின்சக்தியில் முழுமை பெற்ற முதன்மை மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் 34,864 மெகாவாட் தற்போது மின் உற்பத்தி திறன் உள்ளது. 2030ம் ஆண்டில் 60 ஆயிரம் மெகாவாட் திறன் பெறும்.

கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி இருந்தது என்றும் அன்றைய 10 ஆண்டுகளில் 2 இலட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கியதை சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நமது ஆட்சியில் 15 மாதங்களில் மட்டும் 1,50,000 இலவச இணைப்புகளை வழங்கியுள்ளதை சொல்லி பெருமைப்படுகிறேன்.

நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது. இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்ல வைக்கக் காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமார, நான் பாராட்டுகிறேன். அவரை முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பாராட்டும் போது டார்க்கெட் வைத்து செயல்படுபவர் என்று நான் குறிப்பிட்டேன். தனக்கு ஒரு டார்க்கெட் வைத்துக் கொள்வார்- அந்த டார்க்கெட்டை எப்படியும் முடித்துக் காட்டுவார் செந்தில்பாலாஜி என்று நான் சொன்னேன், எனக் கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 564

    0

    0