திருச்செந்தூரில் CM ஸ்டாலினின் மருமகன் செய்த பிரமாண்ட யாகம்… தனிநபருக்காக பக்தர்களை அனுமதிக்க மறுப்பதா..? கொந்தளிக்கும் மக்கள்..!

Author: Babu Lakshmanan
2 August 2022, 10:11 pm

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ளது. முதல்முறையாக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவரது வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முக்கிய காரணமாக இருந்தாலும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக பேச்சுகள் எழுந்தன.

அதேவேளையில், அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும், தமிழக அரசை தனது கட்டுப்பாட்டில் சபரீசன் வைத்துள்ளதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அண்மையில், முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை போடுவதற்கு சபரீசனே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. அரசு முறை பயணமாக இருக்கும் போது, எந்த தொடர்பும் இல்லாத, முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினரை அழைத்துச் சென்றது ஏன்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சபரீசன் யாகம் செய்து தரிசனம் செய்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 12 மாந்திரீகர்களுடன் பிரமாண்ட யாகத்தை சபரீசன் செய்ததாகவும், இதற்காக பல மணி நேரம் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அப்போது, பக்தர்கள் சிலர், சபரீசன் உள்பட 5 பேருக்காக, எங்களை கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும், வள்ளி குகையை அடைத்து வைத்து பக்தர்களை காக்க வைத்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், “தனிநபருக்காக பக்தர்களை தடுத்து நிறுத்திய திருச்செந்தூர் காவல் துறை; இப்படி அராஜகம் பண்ணினால் உண்மையான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல யோசிப்பார்கள். திருட்டு திராவிட திமுகவுக்கு கோயிலில் என்ன வேலை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 733

    0

    0