மாணவர்கள் பள்ளிக்கு சாப்பிடாமல் வருவதை கேட்டு அதிர்ந்து போனேன்.. அப்ப எடுத்த முடிவுதான் இது : முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Author: Babu Lakshmanan
1 February 2023, 5:36 pm

வேலூர்: மாணவர்கள் காலையில் உணவு அருந்தவில்லை என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டும் திட்ட பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தை நேய பள்ளி ரூ.784 கோடி திட்ட மதிப்பில் 196 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,351 புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி
ஒன்றியங்களை சார்ந்த 55 பள்ளிகளில் ரூ.15.96 கோடி மதிப்பில் 114 வகுப்பறைகள் கட்டும் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 6 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ2. 07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள், வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ. 1. 92 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 16 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.4. 56 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 7 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.1.99கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள்

கி.வ குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.85,9 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.2. 85 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 6 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.1. 71 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் என 7 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 55 பள்ளிகளில் ரூ.15.96 கோடி மதிப்பில் 114 வகுப்பறைகள் கட்டும் திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:- இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் கொரானா காலத்தில் பாழடைந்த உள்ள பள்ளி வகுப்புகளை புதுப்பிக்க 2400 கோடி ஒதுக்கிடுசெய்யப்பட்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் குறிப்பாக 535 பள்ளிகள் புதுப்பிக்க இன்றைக்கு 734 கோடி மதிப்பிட்டில் இன்று தொடங்கபட்டது, அதில் வேலூர் மாவட்டத்தில் 14.90 கோடி திட்டத்தில் 116 பள்ளி பயன்பட உள்ளது.

நம் அரசு கல்வி மறுத்துவத்தை இரண்டு கண்களாக பாவித்து வருகிறது. நான் பல இடங்களுக்கு ஆய்வு செய்ய சென்றபொழுது பள்ளிகளுக்கு ஆய்வு செய்ய சென்றேன். அப்பொழுது, பள்ளி மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிடவில்லை என்று கூறினார்கள். அதில், அதிர்ச்சியடைந்த நான், அதனால் தொடங்கபட்டதுதான் காலை உணவு திட்டம். விரைவில் அது முழுமைபடுத்தப்படும், என்று கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 817

    0

    0