மோசடி வழக்கு விவகாரம்… அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யனும் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
31 October 2022, 9:49 pm

கரூர் ; உயர்நீதிமன்ற உத்தரவை முன்னிறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் தாமாக முன்வந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றபிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், ஒரு வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Senthil Balaji - Updatenews360

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் கூறியதாவது :- ஏற்கனவே கரூர் மாவட்ட பாஜக சார்பில் செந்தில்பாலாஜி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அப்போது வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை முன்னிறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தாமாக முன்வந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று, கரூர் மாவட்ட பாஜக கோரிக்கை விடுத்துள்ளது, என்றார்.

மேலும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும், கோரிக்கையை பொருட்படுத்தாத பட்சத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் விரைவில், கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யக்கோரி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும், என அவர் தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!