வாக்கிங் சென்று வாக்குசேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின்… டீக்கடையில் அமர்ந்து தேநீர் குடித்தபடி வாக்குசேகரிப்பு..!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 9:44 am

தஞ்சை ; தஞ்சை அன்னை சத்யா ஸ்டேடியத்தில் நடைபயிற்சி சென்றவாறு முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். தஞ்சை சங்கம் ஹோட்டலில் தங்கி இருக்கும் முதல்வர் டீசர்ட், டிராக் பேண்ட் அணிந்து அன்னை சத்யா ஸ்டேடியத்தில் இரண்டு கி.மீ. நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள், விளையாட்டு வீரர், வீரர்ங்கனைகளிடம் வாக்கு சேகரித்தார்.

அவர்கள் முதல்வர் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ஹாக்கி விளையாடி கொண்டு இருந்த ஒரு சிறுவன், முதல்வரை சாப்பிட்டிங்களா..? என கேட்டான், அவர் சிரித்துக் கொண்டே சிறுவனை தட்டி கொடுத்தார். தொடர்ந்து, தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் வியாபாரிகள் பொதுமக்களிடம் முதல்வர் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, தனியார் இனிப்பக கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அவருக்கு வழங்கிய தேநீர் சூடாக இருந்ததால், சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தேனீரை ஆற்றி, சூடு ஆறிய பின் கொடுத்தார். அதனை ருசித்து தமிழக முதல்வர் அருந்தினார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!