மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் கோவில்களில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் ; கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு..!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 11:02 am

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோவில்களில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவில் கடந்த 10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சாமி கோவிலில், கடந்த 3ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

இரு கோயில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வதான்யேஸ்வரர் கோயில், மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் இன்று இரண்டு கோயில்களிலும் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டது குறிப்பிட்டதக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!