கள்ளச்சாராய இறப்புக்கு ₹10 லட்சம் என்ன? ₹20 லட்சம் கூட CM கொடுப்பார் : யாரும் தலையிட முடியாது : சபாநாயகர் அப்பாவு!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 12:31 pm
appavu
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பல் மருத்துவமனையை திறந்து வைக்க வருகை தந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி பல் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்க 10 லட்சம் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு 10 லட்சம் அல்லது 20 லட்சம் வேண்டுமானாலும் முதல்வர் கொடுப்பார். கொள்கை முடிவு எடுப்பது முதல்வரின் முடிவு அதில் யாரும் தலையிட முடியாது

அதிமுக வினர் சட்டசபையில் பேசுவது சிக்கல் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை நாங்கள் அவர்களும் உள்ளே இருந்து அவர்களது கருத்தை கூற வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் அவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள்.

அதி முக்கிய பிரச்சினைகளை அதிமுகவினர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் . வரும் காலங்களில் அவர்கள் அதிக நேரம் அமர்ந்து சட்டசபையில் பேச வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம் என தெரிவித்தார்.

சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு, ஆங்காங்கே நடக்கும் சில கொலைகளை சுட்டிக்காட்டி அரசுக்கு எதிராக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

அதனால் தான் உலக செஸ் போட்டி தமிழ்நாட்டில் நடந்துள்ளது இதில் இருந்தே இங்கு சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.
உடன் மேயர் மகேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 526

    0

    0