கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணி செய்ய விடாமல் மிரட்டல் : கூட்டுறவு சங்கத் தலைவரின் கணவர் அத்துமீறல்… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 9:12 pm

கள்ளக்குறிச்சி : கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணிசெய்ய விடாமல் தடுத்து, கூட்டுறவு கடன் சங்கத் தலைவரின் கணவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிரட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக அதிமுகவை சேர்ந்த சகுந்தலா செயல்பட்டு வருகிறார்.

ஆனால், இவர் டம்மிதான். இவருடைய கணவர் தங்கையா தான் ஆக்டிங் தலைவராக இருந்து வருகிறார். இவர், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் லட்சுமி நாராயணனை, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த ஆக்டிங் தலைவராக செயல்பட்டு வரும் தங்கையா, கூட்டுறவு கடன் சங்கத்தின் முக்கியப் பணிகள் மற்றும் பொறுப்புகளை சாதாரண ஊழியரான விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

தங்கையாவின் இந்தத் தரமற்ற செயல், மற்ற ஊழியர்களை கவலை அடையச் செய்துள்ளது. மேலும், தங்கையாவின் இந்த அத்துமீறலை செயலாளர் லக்ஷ்மி நாராயணன் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது, ஆக்டிங் அதிமுக தலைவராக செயல்பட்டு வரும் தங்கையா தனது ஆதரவாளர்களோடு வந்து, செயலாளர் மற்றும் சில ஊழியர்களிடம் அத்துமீறி நடந்து, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது, பேசாமல் உட்காருங்கள் என்று கையை உயர்த்தி, கடுமையாக மிரட்டி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 555

    0

    0