கூட்டுறவு சங்க அலுவலகத்தில் புகுந்து ஊழியருக்கு கத்திக்குத்து : நிலப் பிரச்சனையால் விபரீதம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 12:04 pm

தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட எம். ஒட்டப்பட்டி பகுதியில் 1998ம் ஆண்டு முதல் ஒட்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தின் இடமானது பெருமாள் என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தானமாக வழங்கி உள்ளார். இந்நிலையில் பெருமாள் மற்றும் அவரின் சகோதர் முனியப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தினை சுமார் 20 வருடத்திற்கு முன்பு இரண்டாக பிரித்து அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முனியப்பன் மகன் மணி என்பவர் அடிக்கடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்து இது தன் தந்தைக்கு சொந்தமான இடம் காலி செய்து கொடுங்கள் என அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதனையடுத்து மதிகோண்பாளையம் காவல் துறையினர் மணியை அழைத்து சமதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ஙத்திற்கு சென்ற மணி என்பவர் இன்னும் நீங்கள் காலி செய்யவில்லையா என அலுவலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.

உடனடியாக அருள் என்பவர் அவரை தள்ளி விட்டு வெளியே சென்றதையடுத்து அருகே இருந்தவர்களும் மணியை தடுக்க முற்பட்ட போது அவர்களையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து தாக்கி உள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களும் மணியை தாக்கியுள்ளனர். இதனால் அலுவலக ஊழியர் உட்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிகோண்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணி என்பவரும் அலுவலக ஊழியர்கள் என்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 238

    0

    0