கோவை : தமிழக மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது, ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறும் போது : முதல்வர் ஆணைக்கு இணங்க, பொதுமக்கள் தாகம் தீர்க்க பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மோர் பந்தல்களில் இளநீர், தர்பூசணி ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. கோவையை பொருத்தவரை முதல்வர் வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக நிதிகளை வழங்கி வருகிறார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டம் ஏதும் கொண்டுவரப்படவில்லை, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் ஆய்வு செய்து பணிகளை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நமது மின் தேவை 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது.
முதல்வர் வழிகாட்டுதல் படி, 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு மின் தேவைக்காக வெளிச்சந்தையில் மின்சாரத்தையும் வாங்கி வருகின்றோம். அடுத்த ஆண்டு அனைத்து மின்சார தேவைகளும் பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வருகிறோம்.
மேம்பாலப் பணிகள் குறித்த கேள்விக்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களை அழைத்து பேசி தீர்வு காணப்பட்டு மேம்பால பணிகள் தொடரும் எனவும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு பின்னர் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் மேலும் குடிநீரைப் பொருத்தவரை கிடப்பில் போடப்பட்டுள்ள ஆய்வுகளை முன்னெடுத்து குடிநீர் சரிசெய்யப்படும் இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.