கோப்ரா படம் இந்த தேதியில் வெளியாகிறதா.? ஹிட் கொடுப்பாரா விக்ரம்.?
Author: Rajesh12 May 2022, 10:47 am
‘டிமாண்டி காலனி’ ‘இமைக்கா நொடிகள்’ படங்களை தொடர்ந்து இயக்குனர் ஞானமுத்து இயக்கி இருக்கும் திரைப்படம் தான் கோப்ரா.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கனிகா, உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக கடந்த பிப்ரவரி மாதம் படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் வரை தொடர் விடுமுறை தினங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியாகும் விக்ரம் படம் பெரும்பாலும் ஹிட் கொடுக்காத நிலையில், இந்த படம் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவை தவிர விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ளார்.