ஆடி அமாவாசைக்கு விசிட்.. பூஜையில் கலந்து கொண்ட நாகப்பாம்பு; பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

Author: Vignesh
5 ஆகஸ்ட் 2024, 11:44 காலை
Quick Share

சின்னாளப்பட்டி அருகே பித்தளைப் பட்டியல் ஆடி அமாவாசை பூஜைக்கு எதிடீரென வந்த ஐந்தடி நீளம் கொண்ட நாகப்பாம்பு பூஜை முடியும் வரை காத்திருந்தது பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்துள்ள பித்தளை பண்பாட்டியல் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோவிலில் அடி 18 மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென அந்த பகுதியில் இருந்து ஐந்தடி நீளம் கொண்ட நாக பாம்பு ஒன்று வந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்து கொண்டு பூசாரி பூஜை செய்து கொண்டு மணி அடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நாகப்பாம்பு எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் அசைவம் இன்றி அமைதியாக படுத்துக்கொண்டது.

பூஜைகள் முடியும் வரை சுமார் அரை மணி நேரமாக அந்த இடத்தை விட்டு எந்த ஒரு அசைவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. பின்னர், பூஜை முடிந்தவுடன் . யாருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் அமைதியாக அந்த இடத்தை விட்டு சென்றது இதனை கண்ட பெண்கள் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பக்தி பரவசத்துடன் அதனை கையெடுத்து கும்பிட்டு வழி அனுப்பி வைத்தனர்.

அம்மன் பூஜையில் நாக பாம்பு வந்து பங்கேற்ற வீடியோ தற்போது சமூக வலைதள வைரலாக பரவி வருகிறது. இதனை அங்கிருந்த பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்கள் பரவி வருகிறது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 166

    0

    0