அரவக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் சேவல் சண்டை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிராபகர் உத்தரவுப்படி கரூர் நகரம், கரூர் ஊரகம் மற்றும் குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியான சேந்தமங்கலம் மேல்பாகத்தை சேர்ந்த வால்நாயக்கனூர், வேலம்பாடி கிராமம் குறும்பபட்டி பொன்னாவரம், நாகம்பள்ளி கிராமம் செல்லாண்டியம்மன் கோவில், மணல்மேடு மற்றும் கொத்தம்பாளையம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் கைது செய்து 6 வழக்குகள் பதிவு செய்து. அவர்களிடமிருந்து சண்டைக்கு பயன்படுத்திய சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலர் மாவட்ட நிர்வாகம் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் அவ்வாறு தவறான தகவல் பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிராபகர் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பிடித்துள்ளார்.
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
This website uses cookies.