நானும் குடிகாரன்தான்… மது பாட்டிலில் கரப்பான் பூச்சி : மதுப்பிரியர்களுக்கு கருத்து சொன்ன குடிமகனின் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 12:57 pm

விழுப்புரத்தில் மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருந்ததை வீடியோ எடுத்து கருத்து சொல்லிவிட்டு குடிக்க காசு இல்லாத நிலையில் அதே பாட்டிலை திருப்பி கொடுத்து மாற்று பாட்டிலை கேட்ட குடிகமன் வீடியோ வைரலாகி வருகிறது.

விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

இந்த டாஸ்மாக் மதுபான கடையில் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அக்கிராமத்தில் உள்ள சில இளைஞர்கள் மது வாங்குவதற்காக சென்று உள்ளனர்.

அப்போது சீல் பிரிக்கப்படாத மது பாட்டிலின் உள்ளே கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட இளைஞர் அந்த பாட்டிலை வீடியோ எடுத்து மற்ற குடிமகன்களுக்கு அறிவுரையும் கருத்தையும் சொல்லிவிட்டு குடிக்க காசு இல்லாததால் அந்த கரப்பான் பூச்சி இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்று அதே கடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு ஒரு சரக்கு பாட்டிலை கேட்கும் வீடியோ சமூக வலைதளங்கள் மூலம் வேகமாக பரவி வருகிறது.

https://vimeo.com/790337371
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!