12 வயது வடமாநில சிறுமி கடத்தல் ; கோவைக்கு அழைத்து வந்த சக பள்ளி மாணவன்… வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 8:59 am

கோவை : வடமாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சக பள்ளி மாணவன் ஒருவன் கோவைக்கு கடத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அமான் சிங் இவருடைய 12 வயது மகளுக்கு, அவர் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவனுடன் சமூக வலைதளம் வாயிலாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். அவரை சிறுவன் கடத்திச் சென்றது கண்காணிப்பு கேமரா பதிவில் தெரிந்தது.

பெற்றோர் அளித்த புகாரில் டெல்லி போலீசார் வழக்கு பதிந்தனர். இருவரது மொபைல் போன் சிக்னல்களையும் போலீசார் கண்காணித்தனர். சிறுமியை கடத்திய சிறுவன், கோவையில் வசிக்கும் நண்பனிடம் உதவி கோரியது தெரிய வந்தது.

இந்த தகவலை தமிழக போலீசாருக்கு லக்னோ தொழிலதிபர் தெரிவித்தார்; தன் மகளை மீட்க உதவுமாறும் கோரிக்கை விடுத்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுமி, சிறுவன் படங்களுடன், ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்களில் கோவை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 626

    0

    0