தீபாவளிக்கு துணி எடுக்க வந்த 17 வயது சிறுவன் குத்திக்கொலை ; மற்றொரு சிறுவன் வெறிச்செயல்..!!

Author: Babu Lakshmanan
22 October 2022, 10:34 am

கோவை : கோவையில் தீபாவளிக்காக துணி எடுக்க வந்த 17 சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் நேற்று இரவு டவுன்ஹால் ராஜவீதி பகுதிக்கு துணி வாங்க வந்துள்ளார். அப்போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுவனும் அங்கு வந்துள்ளார்.

அவர்களிடையே இருந்த முன்பகை காரணமாக இருவரும் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாரியாக குத்தினார்.

இதில் சரிந்து விழுந்த மற்றொரு சிறுவனை மீட்டு அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!