நண்பனை நம்பி போன சிறுமி.. அறையில் கேட்ட அலறல் : கோவையை அதிர வைத்த கூட்டுப்பாலியல்!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2025, 1:59 pm
கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் கொண்டிருந்தார். அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க : காதலனைத் தேடி சென்னை டூ தஞ்சை வந்த சிறுமி.. 3 நாட்கள் பூட்டி வைத்து வன்கொடுமை.. காதலன் எங்கே?
அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. சிறுமி வீடு திரும்ப தாமதமானதால், சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது.
இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் 7 கல்லூரி மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.