16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து வன்கொடுமை : 45 வயதான நபரை கைது செய்தது போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
31 March 2022, 10:32 pm

கோவையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த 45 வயதான நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கோவை இரத்தினபுரி பகுதியில் தள்ளுவண்டியில் தொழில் செய்து வந்தவர் செந்தில். இவருக்கும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. காதலிப்பதாக கூறி திருமணம் செய்துக்கொள்வதாக 16 வயது சிறுமியை திருப்பதி அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதற்கிடையே, சிறுமியை காணவில்லை எனக்கூறி பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சிறுமியை தேடி வந்த காவல்துறையினர், திருச்செந்தூரில் சிறுமியையும், அவருடன் இருந்த செந்திலையும் கைது செய்தனர். செந்தில் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 1250

    1

    0