3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு… தீராத விளையாட்டு பிள்ளையான 72 வயது முதியவருக்கு சிறப்பான தண்டனை… நீதிமன்றம் அதிரடி!!

Author: Babu Lakshmanan
5 April 2022, 10:46 am

கோவையில் மூன்று சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு, ஒவ்வொரு வழக்கிலும் ஐந்தாண்டு சிறை மற்றும் கொலை மிரட்டலுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பு அளித்தது.

கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள குப்பனுார், சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (72). இவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு சென்ற 11 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகளிடம், பாலியல் தொல்லை செய்தார். யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இது தொடர்பாக, 2019ல் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின்படி, பெருமாள்சாமியை, ‘போக்சோ’ சட்டத்தில், கைது செய்து சிறையிலடைத்தனர். இவர் மீது கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட பெருமாள்சாமிக்கு, மூன்று போக்சோ சட்டப்பிரிவில் தலா ஐந்தாண்டு சிறை, கொலை மிரட்டலுக்கு மூன்றாண்டு சிறை, மற்றும் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி