கோவையில் மூன்று சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு, ஒவ்வொரு வழக்கிலும் ஐந்தாண்டு சிறை மற்றும் கொலை மிரட்டலுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட் தீர்ப்பு அளித்தது.
கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள குப்பனுார், சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (72). இவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு சென்ற 11 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகளிடம், பாலியல் தொல்லை செய்தார். யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இது தொடர்பாக, 2019ல் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின்படி, பெருமாள்சாமியை, ‘போக்சோ’ சட்டத்தில், கைது செய்து சிறையிலடைத்தனர். இவர் மீது கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட பெருமாள்சாமிக்கு, மூன்று போக்சோ சட்டப்பிரிவில் தலா ஐந்தாண்டு சிறை, கொலை மிரட்டலுக்கு மூன்றாண்டு சிறை, மற்றும் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.