கோவையில் 96 திரைப்பட புகழ் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ குழு நடத்தும் பிரம்மாண்ட இசைக்கச்சேரி : டிக்கெட் விலையுடன் தேதி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2022, 2:14 pm
கோவை : 96 திரைப்பட புகழ் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ குழுவினர் நடத்தும் பிரம்மாண்ட இசைக்கச்சேரி கோவையில் வரும் 30 தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்ஷ்மிகாந்த் கூறியதாவது :
கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஏற்கனவே சோசியல் சாண்டா என்ற ஷாப்பிங் நிகழ்ச்சியை நடத்தினோம்.
கொரோனா காலத்தில் வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடந்த நிலையில் வெளியில் செல்லும் அர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கோவையில் இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டுழ்ள்ள்லோம்.
தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற அமைப்பினர் இசைக்கச்சேரி நடத்துகின்றனர். இதற்கான டிக்கெட்டுகள் இணையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக டிக்கெட்டுகள் வாங்க நினைப்பவர்கள் 9088144566 என்ற எண்ணை அழைக்கலாம்.
இந்த இசைக்கச்சேரியை நடத்தும் தாய்க்குடம் பிரிட்ஜ் அமைப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளனர். 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா குழுவினர் தான் இந்த கச்சேரியை நடத்துகின்றனர்.
இந்த இசை நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. ரூ.500, ரூ.1000, ரூ.2500, ரூ.5000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ் ரிபளிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மது, ஒருங்கிணைப்பாளர் எழில் ஆகியோர் கலந்து கொண்டனர்.