முழு கொள்ளளவை எட்டிய பொள்ளாச்சி ஆழியார் அணை… ஆனைமலை உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 10:26 am

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 117.5 அடியை எட்டியது.

அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,750 கன அடி உபரி தண்ணீர் ஆழியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆழியாற்று கரையோரப் பகுதிகளான ஆழியார் ஆற்றங்கரை, ஆனைமலை, அம்பராம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. கால்நடைகளை ஆற்றில் இறக்கக்கூடாது எனவும், வருவாய்த் துறையினர், பொதுப்பணித்துறையினர், காவல் துறையினர் அறிவுறுத்தி, தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்