அடேங்கப்பா.. கோவை – அபுதாபி நேரடி விமான சேவை.. தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே உற்சாக வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2024, 4:50 pm

தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் விளைவாக கோவை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று தொடங்கிய முதல் விமான சேவையில் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் 163 பயணிகள் கோவைக்கு வந்தடைந்தனர்.

காலை 6.40 மணிக்கு வந்து சேர்ந்த விமானம், 7.30 மணிக்கு மீண்டும் கோவையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணம் செய்தனர்.இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை வாரத்திற்கு 3 நாட்கள் என்ற அடிப்படையில் விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், வளர்ந்து வரும் கோவை நகரில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கோவை கூடுதல் வளர்ச்சியை பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 302

    3

    1