சாலையோர வியாபாரிகளிடம் வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் : கோவையில் நூதன பிரச்சாரம்..!!

Author: Babu Lakshmanan
10 February 2022, 2:33 pm

சென்னை : கோவையில் சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்பனை செய்து, அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் நூதன முறையில் பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்பாளர்கள் அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் ஷர்மிளா சந்திர சேகர். தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், கணவருமான சந்திரசேகர் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், 38வது வார்டுக்குட்பட்ட ஓணாம்பாளையம் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சாலையோர வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய ஷர்மிளா சந்திரசேகர், காய்கறி கடைக்கு வந்த பொதுமக்களுக்கும், காய்கறிகளை விற்பனை செய்து ஆதரவு திரட்டினார்.

அதிமுக வேட்பாளரின் இந்த நூதன பிரச்சாரம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!