கோவையில் தொடர்ந்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர்.. !!

Author: Babu Lakshmanan
14 February 2022, 12:56 pm

சென்னை : கோவையில் 38வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்பாளர்கள் அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள ஷர்மிளா சந்திரசேகர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சாலையோர வியபாரிகள், பெண்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரிடமும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 38வது வார்டுக்குட்பட்ட டான்ஷா நகர், விருதா அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஷர்மிளா சந்திரசேகர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு மலர் கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

அப்போது, இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டிய அவர், பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுப்பேன் என உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ