கோவை ; ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார்.
சார்ஜாவில் இருந்து கோவை விமான விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த வாலிபரின் பையை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அந்த வாலிபரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது வாலிபர் வர மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தான் கையில் வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவையும் கிழித்து வீசினார். இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பீளமேடு போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தை சேர்ந்த முகமது சாலிக் என்பது தெரியவந்தது. மேலும் இவர் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவதும், அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாகவே அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்ததாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார் என்ற தகவல்கள் பாஸ்போர்ட்டில் இருப்பதால், அதனை பார்த்து அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் கிழித்த தாகவும் ஒப்புக் கொண்டார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்த 18 பயணிகளை நேற்று கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.பேண்ட் பாக்கெட்டுகள், உடைகள், சாமான்கள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சுரேஷ்குமார் (வயது 37, சென்னை), சங்கர் (வயது 29, கடலூர்) ராம்பிரபு (வயது 35, பரமக்குடி), குமரவேல் (வயது 44, சேலம்) ஆகிய நான்கு பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.