கோவை : அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடையை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், வடக்கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடகலூர் பயணியர் நிழற்குடை ஆனது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நிழற்குடையானது வடக்கலூர் கிராம அலுவலகத்திற்கு முன்பு உள்ளது.
ஊர் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், வடக்கலூர் ஊரை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் தங்களது குறைகளை சொல்வதற்கு வடக்கலூர் ஊராட்சி அலுவலகத்திற்கு வருவதற்கும், மற்றும் இங்கு செயல்படும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களது வீட்டிற்கு செல்வதற்கும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், வெளியூருக்கு வேலைக்கு செல்லும் கிராம மக்களும் இந்த பயணியை நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்சமயம் பெய்து வரும் பருவமழை காரணமாக இந்த பயணிகள் நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை சுற்றி விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும், அதிகப்படியான பருவ மழையின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நீர் தேங்கி சுகாதாரம் கேடு விளைவிக்கும் அளவில் மாசுபாடு அடைந்துள்ளது.
இந்த பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் இப்போது பயணியர் நிழற்குடையை பயன்படுத்தாமல் தார் சாலையின் ஓரமாக நின்றும், கால் வலியின் காரணமாக தார் சாலையின் மேல் உட்கார்ந்தும் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
This website uses cookies.